செய்திகள் விளையாட்டு
சுக்மா கபடிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கெடாவும் பெண்கள் பிரிவில் சிலாங்கூரும் தங்கப்பதக்கம் வென்றன
செர்டாங்:
சுக்மா கபடிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கெடாவும் பெண்கள் பிரிவில் சிலாங்கூரும் தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளன.
சுக்மா விளையாட்டுப் போட்டி சிலாங்கூர் மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் கபடி போட்டிக்கான இறுதி சுற்றுகள் இன்று பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்று முடிந்தது.
செர்டாங்கில் நடைபெற்ற கபடி போட்டியின் ஆண்கள் பிரிவில் கெடா அணியினர் தங்கப்பதக்கத்தை வென்றனர்.
இப்பிரிவில் சிலாங்கூர் அணியின் வெள்ளிப்பதக்கமும் கூட்டரசுப் பிரதேச அணியினர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
பெண்கள் பிரிவில் சிலாங்கூர் அணியினர் தங்கப்பதக்கத்தை வென்றனர்.
இப்பிரிவில் கூட்டரசுப் பிரதேச அணியினர் வெள்ளிப்பதக்கமும் பேரா அணியினர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
சிலாங்கூர் மாநில இளைஞர் விளையாட்டுத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் முகமத் நஜ்வான் ஹலிமி, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் உட்பட பல பிரமுகர்கள் பதக்கங்களை எடுத்து வழங்கினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 19, 2026, 9:52 am
மெஸ்ஸி அமைதி காத்து வருகிறார்: ஹோயோஸ்
August 19, 2026, 9:48 am
முசியாலா இரண்டாவது முறையாக மயங்கி விழுந்தார்
August 18, 2026, 11:19 pm
சுக்மா மகளிர் கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் சிலாங்கூர் அணி
August 18, 2026, 9:04 am
கால்பந்தில் எனது கடைசி ஆண்டு: ரொனால்டோ
August 17, 2026, 5:09 pm
மலேசியாவில் நடைபெறும் சீ விளையாட்டுப் போட்டியில் கபடி இடம் பெறுகிறது: அருள் பிரகாஷ்
August 17, 2026, 9:21 am
செராஸில் ஹரிமாவ் மலாயா அணி வீழ்ந்தது
August 17, 2026, 9:17 am
