நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

முசியாலா இரண்டாவது முறையாக மயங்கி விழுந்தார்

பெர்லிங்:

ஜமால் முசியாலா திடலில் இரண்டாவது முறையாக மயங்கி விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

முனிச்சில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, நேற்று நள்ளிரவில் நடந்த பருவத்திற்கு முந்தைய நட்புப் போட்டியின்போது மயங்கி விழுந்தார்.

இதைத் தொடர்ந்து, பாயர்ன் முனிச் அணியின் நடுக்கள வீரர் ஜமால் முசியாலா திடலில் இருந்து வெளியே தூக்கிச் செல்லப்பட்டார்.

இரண்டாம் பிரிவு அணியான ஹைடன்ஹைமுக்கு எதிரான போட்டியின் முடிவில் களமிறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, 23 வயதான அவர் மயங்கி விழுந்தார்.

மருத்துவ சிகிச்சை பெற்று, ஆடுகளத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​முசியாலா குழப்பமான நிலையில் காணப்பட்டார்.

போட்டிக்குப் பிறகு, பாயர்ன் விளையாட்டு இயக்குநர் மேக்ஸ் எபெர்ல், இந்த நிலைமை குறித்து முசியாலா உரிய நேரத்தில் கருத்து தெரிவிப்பார் என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset