செய்திகள் விளையாட்டு
சுக்மா மகளிர் கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் சிலாங்கூர் அணி
செலயாங்:
சுக்மா மகளிர் கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு சிலாங்கூர் அணியினர் முன்னேறி உள்ளனர்.
சிலாங்கூர் சுக்மா விளையாட்டு போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் மகளிருக்கான கால்பந்து பிரிவில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் சிலாங்கூர் அணியினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் அரையிறுதி சுற்றில் சிலாங்கூர் அணியினர் 5-1 என்ற கோல் கணக்கில் பேரா அணியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
இறுதியாட்டத்தில் சிலாங்கூர் அணியினர் சபா அணியை சந்தித்து விளையாடவுள்ளனர்.
இவ்வாட்டம் நாளை இரவு 8.30 மணிக்கு செலயாங் அரங்கில் நடைபெறவுள்ளது.
இவ்வாட்டத்தில் வெற்றி பெறுவதற்காக சிலாங்கூர் அணியினர் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று சிலாங்கூர் அணியினர் தங்கப்பதக்கம் வெல்வார்கள்.
இதை இலக்காக கொண்டு சிலாங்கூர் அணியினர் நாளை ஆட்டத்தில் களமிறங்கவுள்ளனர் என்று அவ்வணியின் நிர்வாகி கென்னத் கண்ணா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 19, 2026, 9:52 am
மெஸ்ஸி அமைதி காத்து வருகிறார்: ஹோயோஸ்
August 19, 2026, 9:48 am
முசியாலா இரண்டாவது முறையாக மயங்கி விழுந்தார்
August 18, 2026, 11:18 pm
சுக்மா கபடிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கெடாவும் பெண்கள் பிரிவில் சிலாங்கூரும் தங்கப்பதக்கம் வென்றன
August 18, 2026, 9:04 am
கால்பந்தில் எனது கடைசி ஆண்டு: ரொனால்டோ
August 17, 2026, 5:09 pm
மலேசியாவில் நடைபெறும் சீ விளையாட்டுப் போட்டியில் கபடி இடம் பெறுகிறது: அருள் பிரகாஷ்
August 17, 2026, 9:21 am
செராஸில் ஹரிமாவ் மலாயா அணி வீழ்ந்தது
August 17, 2026, 9:17 am
