நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கால்பந்தில் எனது கடைசி ஆண்டு: ரொனால்டோ

லண்டன்:

அடுத்த ஆண்டு கால்பந்தில் தனது கடைசி ஆண்டாக இருக்கலாம் என கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்ததை அடுத்து, அவரது ஓய்வுத் திட்டங்கள் குறித்த யூகங்கள் எழுந்துள்ளன.

41 வயதான போர்த்துகல் அணியின் கேப்டனான இவர், எல்லா காலத்திலும் மிகவும் வெற்றிகரமான வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

2002-ல் ஸ்போர்டிங் அணிக்காக அறிமுகமானதிலிருந்து, அவர் மென்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட், ஜூவாந்தஸ், அவரது தற்போதைய கிளப்பான அல்-நசர் அணிகளுடன் முக்கிய கிண்ணங்களை வென்றுள்ளார்.

ஐந்து முறை பலோன் டி ஓர் விருதை வென்ற ரொனால்டோ, இந்த ஆண்டு உலகக் கிண்ண போட்டியிலிருந்து போர்த்துகல் அணி வெளியேற்றப்பட்டதால், தனது வெற்றிகளின் தொகுப்பில் ஒரு கிண்ணத்தை சேர்க்கத் தவறினார்.

இந்நிலையில் இது கால்பந்தாட்டத்தில் எனது கடைசி ஆண்டாக இருக்கலாம்.

மேலும் நான் ஒரு மகத்தான பாரம்பரியத்தை விட்டுச் செல்ல விரும்புகிறேன் என்று ரொனால்டோ ஒரு பேட்டியில்  கூறினார்.

இது அவரின் ஓய்வை குறிப்பதாக கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset