நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சுக்மா மகளிர் கால்பந்து போட்டி: சிலாங்கூர் அணி தங்கம் வென்றது

செலயாங்:

சுக்மா மகளிர் கால்பந்து போட்டியில் சிலாங்கூர் அணி தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளனர்.

சிலாங்கூர் சுக்மா விளையாட்டு போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் பெண்களுக்கான கால்பந்து போட்டியின் இறுதியாட்டம் நேற்று செலயாங் அரங்கில் நடைபெற்றது.

இந்த இறுதியாட்டத்தில் சிலாங்கூர் அணியினர் சபா அணியை சந்தித்து விளையாடினர்.

ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் சிலாங்கூர் முன்கள வீராங்கனை சூ யின் பட்லர் சிலாங்கூர் அணிக்காக கோல் அடித்ததை சுமார் 5,000 உள்ளூர் ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினர்.

சபா அணியின் தடுப்பாட்ட வீரர் பந்தைச் சரியாகக் கட்டுப்படுத்தத் தவறியதன் விளைவாக இந்தக் கோல் ஏற்பட்டது. 

ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் சூ யின் பட்லர் சிலாங்கூரின் இரண்டாவது கோலை அடித்தபோது சிலாங்கூரின் முயற்சிகள் இறுதியாகப் பலனளித்தன.

அதன்பிறகு, சிலாங்கூர் ஆட்டத்தைத் தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, இறுதி விசில் ஒலிக்கும் வரை இரண்டு கோல்கள் முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்டது.

இறுதியில் 2-0 என்ற இந்த வெற்றியானது, சிலாங்கூரை 22ஆவது சுக்மா மகளிர் கால்பந்து சாம்பியனாக உறுதி செய்தது, 

அதே நேரத்தில் சபா வெள்ளிப்பதக்கத்தை வென்றது.

இதனிடையே சிலாங்கூர் அணியின் வெற்றிக்கு துணை நின்ற குறிப்பாக டச் ட்ரோனிக் நிறுவனத்திற்கு நன்றி என்று அவ்வணி நிர்வாகி கென்னத் கண்ணா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset