நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமூகத்திற்கு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தாலும், அவற்றைச் செயல்படுத்துவதே முக்கியப் பிரச்சினை: ரபிசி

பெட்டாலிங்ஜெயா:

பல ஆண்டுகளாக இந்திய சமூகத்திற்கு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தாலும், அவற்றைச் செயல்படுத்துவதே முக்கியப் பிரச்சினையாக உள்ளது.

பெர்சமா கட்சியின் தலைவர் ரபிசி ரம்பி இதனை கூறினார்.

19 இந்திய அரசு சாரா இயக்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை நான் கருத்தில் கொண்டுள்ளேன்.

பெர்சமா கட்சியின் கொள்கை அறிக்கையை உருவாக்கும்போது இந்த முன்மொழிவைக் கட்சி பரிசீலிக்கும்.

அதுவே இறுதியில் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு அடிப்படையாக அமையும்.

கட்சி மற்ற குழுக்களுடனும் கலந்தாலோசிக்கும்.

மேலும்  கெலோம்பாங் சக்ஸாமாவுடன் மேலும் கலந்துரையாடல்களை நடத்தும் என்று அவர் கூறினார்.

பல ஆண்டுகளாக இந்திய சமூகத்திற்கு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தாலும், அவற்றைச் செயல்படுத்துவதே முக்கியப் பிரச்சினை என்ற கவலையையும் ரபிசி  ஒப்புக் கொண்டார்.

இந்த பரந்த பிரச்சினைகள் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டாலும், சிறப்பு கவனம் தேவைப்படும் குழுக்கள் இன்னும் இருக்கும்.

ஏனெனில், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அவற்றுக்கான சூழல்களும் ஒவ்வொரு குழுவிற்கும் வேறுபடுகின்றன  என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset