செய்திகள் மலேசியா
இந்திய சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண 3 முன்மொழிவுகளைச் செயல்படுத்த 19 அரசு சாரா இயக்கங்கள் வலியுறுத்தல்
பெட்டாலிங்ஜெயா:
இந்திய சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வும் காண 3 முன்மொழிவுகளைச் செயல்படுத்த வேண்டும்.
கெலேம்பாங் சக்சமா என அழைக்கப்படும் 19 இந்திய அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்பு இதனை முன்மொழிந்தன.
இந்திய சமூகத்தின் சமூக, பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காக ஒரு பிரத்யேக சட்டப்பூர்வ அமைப்பு, பொது-தனியார் நிதிக் கருவிகள் மற்றும் ஒரு அமைச்சரவைக் குழு ஆகியவற்றை நிறுவ முன்மொழிந்துள்ளது.
இந்தக் கூட்டமைப்பின் பிரதிநிதியான, கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ,
சமூகத்தின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்குப் பொறுப்பான முன்னணி அமைப்பாக இந்தச் சட்டப்பூர்வ அமைப்பு செயல்படும்.
இந்திய சமூகம் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், வறுமையை நிவர்த்தி செய்வதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நிர்வகிப்பதற்குப் பொறுப்பான ஒரு குடை அமைப்பாக இந்த அமைப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்
என்று பெர்சமா கட்சித் தலைவர்களைச் சந்தித்த பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்திய சமூகம், அரசாங்கத்தின் பங்களிப்புகளுடன், ஒரு பொது, தனியார் நிதிக் கருவியை நிறுவுவதே இரண்டாவது முன்மொழிவாகும்.
தொழில்முனைவு, கல்வி, நலத்திட்டங்களுக்கு ஆதரவளிக்க, முதல் ஆண்டில் சமூகத்திடமிருந்து சுமார் 100 மில்லியன் ரிங்கிட்டை திரட்ட முடியும் என்று அந்த அரசு சாரா அமைப்பு நடத்திய ஆய்வு காட்டுவதாக அவர் கூறினார்.
சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒரு அமைச்சரவைக் குழுவை நிறுவுவதே மூன்றாவது முன்மொழிவாகும்.
எனவே, அமைப்பு ரீதியாக, அமைச்சரவைக் குழு கூடிய விரைவில் அமைக்கப்பட வேண்டும்.
அதுவே, நாங்கள் முன்மொழியும் நிதி ஒதுக்கீட்டுக் கருவி மற்றும் குறிப்பிட்ட சட்டப்பூர்வ அமைப்பை நிறுவுவதற்கான அடிப்படையாக அமையும்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியர்களின் சமூக, பொருளாதார நிலை மோசமடைந்துள்ளது.
மலேசியாவின் மக்கள் தொகையில் சுமார் 6.5% ஆக உள்ள இந்த சமூகத்திற்கு அதிகாரம் அளிக்க அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 20, 2026, 6:47 pm
தாபோங் ஹாஜி, பெல்டா மீதான அரசு விசாரணை ஆணையம்; அரசியல் பழிவாங்கல் அல்ல: பிரதமர்
August 20, 2026, 6:47 pm
புகைமூட்டம்: சரவாக்கில் 591 பள்ளிகள் இன்றும் நாளையும் மூடப்பட்டன
August 20, 2026, 6:46 pm
கோத்தா டாமன்சாராவில் கட்டப்படவிருந்த தரவு மையத் திட்டம் ஒத்திவைப்பு: டத்தோஶ்ரீ ரமணன்
August 20, 2026, 6:44 pm
மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எண்ணெய் பூஜை எண்ணெயாக மாறுகிறது
August 20, 2026, 6:42 pm
பெர்லிஸ் மாநிலத்தில் வீரகாளியம்மன் ஆலயம் உடைப்பு: பொது இயக்கங்கள் கண்டனம்
August 20, 2026, 5:42 pm
