நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலியல் புகார்: தமக்கு எதிரான  அரசியல் சதி என்கிறார் ஜொகூர் சட்டமன்ற உறுப்பினர் Rasman Ithnain

ஜொகூர்:

ஜொகூர் சட்டமன்ற உறுப்பினர் ரஸ்மான் இத்னைன் (Rasman Ithnain) மீது பாலியல் தொல்லை (துன்புறுத்தல்) புகார் அளிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோத்தா திங்கியைச் சேர்ந்த பெர்சாத்து கட்சி பெண் உறுப்பினர் ஒருவரே இந்தப் புகாரை அளித்துள்ளார். இதனால் அக்கட்சியிலும் சலசலப்பு நிலவி வருகிறது.

இதற்கிடையே தம் மீதான பாலியல் புகாரில் எந்தவித உண்மையும் இல்லை என Rasman திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தமக்கு எதிரான அரசியல் சதி என்றும் அவர் கூறியுள்ளார்.

"திங்கட்கிழமை (நேற்று) பிற்பகல் சுமார் இரண்டு மணியளவில் எனக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கும் தகவல் எனக்கு தெரிவிக்கப்பட்டது. இந்தப் புகாரை கோத்தா திங்கி தொகுதியின் Srikandi Bersatu committee உறுப்பினர் ஒருவர் அளித்துள்ளார்.

"இந்தப் புகாரை அறவே மறுக்கிறேன். இது ஓர் அரசியல் சதி மற்றும் அவதூறாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியான எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க நடைபெறும் முயற்சி. எனினும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். மேலும், சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்க உள்ளேன்," என்றும் Rasman கூறியுள்ளார்.

இதையடுத்து, காவல்துறையின் விசாரணை மூலம் நீதி நிலைநிறுத்தப்படும் எனத் தாம் நம்புவதாகவும், தமது வழக்கறிஞர்களுடன் முதற்கட்ட ஆலோசனையை மேற்கொண்டதாகவும் அவர் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கோத்தா திங்கி பெர்சாத்து கட்சி தொகுதித் தலைவரான Rasman, கடந்த 2018ஆம் ஆண்டு, அம்னோ கட்சியின் இரண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கட்சி மாறி, பெர்சாத்துவில் இணைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset