செய்திகள் மலேசியா
பிரதமரைச் சந்தித்தால், நான் துரோகி ஆவேனா?: ஹம்சா
லாருட்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட பல அரசியல் தலைவர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து தான் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் மறுத்துள்ளார்.
பெர்சத்துவிலிருந்து நீக்கப்பட்ட அவர், அரசாங்க பிரமுகர்கள் உட்பட எந்தவொரு தலைவருடனும் சந்திப்புகளை ஒருவரை துரோகி என்று முத்திரை குத்துவதற்கு ஒரு சாக்காகப் பயன்படுத்தக்கூடாது.
நான் பிரதமரை சந்தித்தால், உடனேநான் துரோகி ஆவேனா?
பிரதமரை சந்திப்பது குற்றமல்ல.
மதம், இனம் மற்றும் நாட்டிற்காக போராட்டத்தைத் தொடரவும், மலாய்க்காரர்களின் ஒற்றுமை தொடர்ந்து வலுப்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் விரும்புகிறேன்.
லாருட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள சூராவ், பள்ளிவாசல்களுக்கு நன்கொடைகளை வழங்கிய பிறகு ஊடகங்கள் சந்தித்தபோது அவர் கூறினார்.
முன்னதாக, ஹம்சாவுடன் தொடர்புடைய ஒரு புதிய கட்சி தேசியக் கூட்டணியில் இணைந்தால் பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் உடன்படவில்லை என்று கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 6, 2026, 11:19 am
ஐரோப்பா பயணிகளுக்காக கூடுதல் விமான சேவைகள் அதிகரிப்பு: மலேசியா ஏர்லைன்ஸ் அறிவிப்பு
March 6, 2026, 10:27 am
மதுபோதையில் வாகனம் ஓட்டிய லாரி ஓட்டுநருக்கு RM10,000 ரிங்கிட் அபராதம்
March 6, 2026, 10:16 am
மிரி தோட்டத்தில் தீ விபத்து: 18 அறைகள் கொண்ட தொழிலாளர் குடியிருப்பு முற்றிலும் அழிவு
March 6, 2026, 10:04 am
மன்னிப்பு கேட்காததால் மாணவர் தாக்கப்பட்டாரா?: பெக்கானில் அதிர்ச்சி சம்பவம்
March 6, 2026, 9:58 am
வீடு, கடை முன் பன்றித் தலையை வைத்த வட்டி முதலை
March 6, 2026, 9:57 am
நீலாய் அருகே பிளஸ் நெடுஞ்சாலை வெள்ளத்தில் மூழ்கியது
March 6, 2026, 9:56 am
