நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாநில அரசுகளுக்கான நிதி வழங்கல் இந்த ஆண்டு RM10.5 பில்லியன் வரை அதிகரிக்கும்: பிரதமர் அன்வார்

புத்ராஜெயா: 

இன்று நடந்த கூட்டத்தில் தேசிய நிதி மன்றம் கூட்டாட்சி அரசு மாநில அரசுகளுக்கு வழங்கும் நிதியை அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஆண்டு அந்த நிதி RM10.5 பில்லியன் வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2025 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட RM10.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

கூட்டாட்சி அரசு மாநில அரசுகளுக்கு வழங்கும் நிதி முறையை மேம்படுத்தவும் மன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக நிதி அமைச்சகம் (MOF) தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக கூட்டுப் பட்டியல் மானியம், மாநில சாலை பராமரிப்பு மானியம், சுற்றுலா வரி விநியோகம் ஆகியவற்றில் மேம்பாடுகள் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது.

கூட்டாட்சி அரசின் வழங்கல் 2022 ஆம் ஆண்டில் RM8.1 பில்லியனாக இருந்தது. அது கடந்த ஆண்டு RM10.3 பில்லியனாக உயர்ந்துள்ளதாக MOF தெரிவித்தது.

“இந்த அதிகரிப்பு 2026 முதல் அரசாங்கம் நிர்ணயித்துள்ள மக்கள் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட வழங்கல் (PMBO) விகித உயர்வின் தொடர்ச்சியாகும்.

“மாநில அரசுகளின் பணப்புழக்க நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக, தேசிய நிதி மன்றம் பகிரப்பட்ட பட்டியல் கீழ் நிதி வழங்கும் முறையையும் மேம்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது,” என்று MOF தெரிவித்துள்ளது.

அனைத்து மாநில மக்களும் பயன்பெறும் வகையில் கூட்டாட்சி அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் நிதியை மேம்படுத்த உறுதியாக உள்ளது என்று பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

“மடானி பொருளாதார கட்டமைப்பு அடிப்படையில், நாட்டின் வருவாய் சமமாக பகிரப்பட்டு நல்ல நிர்வாகக் கொள்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

"மடானி அரசு அனைத்து மாநில அரசுகளுடனும் அரசியல் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்பட எப்போதும் தயாராக உள்ளது".

“இந்த நிதி மேம்பாடு சமூக-பொருளாதார வளர்ச்சியையும் முக்கிய அடிப்படை வசதிகளின் மேம்பாட்டையும் வலுப்படுத்த மிகவும் முக்கியமானது. இதன் மூலம் நாம் ஒரு நாடாக சமமாக முன்னேற முடியும்,” என்றார்.

சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset