செய்திகள் மலேசியா
வீடு, கடை முன் பன்றித் தலையை வைத்த வட்டி முதலை
சிரம்பான்:
கோலா பிலாவில் உள்ள ஒரு வீட்டின் முன்பும், தம்பினில் உள்ள ஒரு கடை முன்பும் பன்றியின் தலையை வைத்த சம்பவம் தொடர்பாக இன்று அதிகாலை போலிசாருக்கு இரண்டு புகார்கள் கிடைத்தன.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் ஒருவருக்கொருவர் உறவினர்கள் என்று நெகிரி செம்பிலான் போலிஸ் தலைவர் அல்சாஃப்னி அகமது தெரிவித்தார்.
அதிகாலை 1 மணியளவில் நடந்த இரண்டு சம்பவங்களும் தொடர்புடையவை.
பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினைகளால் தூண்டப்பட்டதாக நம்பப்படுவதாகவும் ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக சந்தேக நபர் உரிமம் பெறாத கடன் வழங்குபவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அதாவது வட்டி முதலை என்று அவர் கூறினார்.
விசாரணையில், இந்தச் சம்பவம் எந்தவொரு தனிநபராலும் மத வெறுப்பால் தூண்டப்படவில்லை.
மாறாக பாதிக்கப்பட்டவரை வட்டி முதலையின் கடனை அடைக்க அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டது என்று கண்டறியப்பட்டது.
சந்தேக நபர் முன்பு கடையில் வண்ணம் வீசிய அதே நபர்தான் என்று போலிசார் நம்புகிறார்கள் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 6, 2026, 11:19 am
ஐரோப்பா பயணிகளுக்காக கூடுதல் விமான சேவைகள் அதிகரிப்பு: மலேசியா ஏர்லைன்ஸ் அறிவிப்பு
March 6, 2026, 10:27 am
மதுபோதையில் வாகனம் ஓட்டிய லாரி ஓட்டுநருக்கு RM10,000 ரிங்கிட் அபராதம்
March 6, 2026, 10:16 am
மிரி தோட்டத்தில் தீ விபத்து: 18 அறைகள் கொண்ட தொழிலாளர் குடியிருப்பு முற்றிலும் அழிவு
March 6, 2026, 10:04 am
மன்னிப்பு கேட்காததால் மாணவர் தாக்கப்பட்டாரா?: பெக்கானில் அதிர்ச்சி சம்பவம்
March 6, 2026, 9:57 am
நீலாய் அருகே பிளஸ் நெடுஞ்சாலை வெள்ளத்தில் மூழ்கியது
March 6, 2026, 9:56 am
