நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேற்கு ஆசியாவில் மோதல்; டத்தோஸ்ரீ அன்வர், ஷெஹ்பாஸ் ஷெரீப் தாக்குதலை உடனடியாக நிறுத்த ஒப்புக்கொண்டனர்

புத்ராஜெயா:

மேற்கு ஆசியாவில் பதற்றத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்தி, நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை அமல்படுத்தி, பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பும் ஒப்புக்கொண்டனர்.

நேற்று மதியம் பிரதமர் ஷேபாஸிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்று, மேற்கு ஆசியாவில் மோதலின் வளர்ச்சி குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதல்களைத் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலைமை குறித்த கவலைகளை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தின் கொள்கைகள், ஐ.நா. சாசனத்தை மீறுவதாகும் என்பதை நான் வலியுறுத்தினேன்.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்தி, நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை அமல்படுத்தி, அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்க பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டும் என்பதையும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்று அவர் நேற்று இரவு முகநூலில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset