செய்திகள் விளையாட்டு
சிலம்பம், கபடி போட்டிகளுக்காக யாரிடமும் கையேந்தக் கூடாது; சுக்மாவில் நிரந்தரமாக இடம் பெற வேண்டும்: டத்தோ சிவநேசன்
செர்டாங்:
சுக்மா விளையாட்டு போட்டிகளில் சிலம்பம், கபடி போட்டிகள் நிரந்தரமாக இடம் பெற வேண்டும்.
பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் இதனை வலியுறுத்தினார்.
மலேசியாவில் சுக்மா மிகவும் முக்கியமான போட்டியாக விளங்குகிறது.
நமது போட்டியாளர்களின் திறனை வெளிக் கொண்டு வகையில் இப்போட்டிகள் விளங்குகின்றன.
இந்த போட்டியில் கபடி, சிலம்பம் இடம் பெறுவதில் ஒரு சில பிரச்சினைகள் தொடர்ந்து நிலவி வருகிறது.
பல மாநிலங்களில் நடைபெறும் சுக்மாவில் இவ்விரு போட்டிகளும் முதலில் இடம் பெறுவதில்லை.
பல கட்ட முயற்சிகளுக்கு பின் அவ்விரு போட்டிகளும் சுக்மாவில் இடம் பெற்று வருகின்றன.
இந்த நிலை மாற வேண்டும். ஒவ்வொரு சுக்மாவிலும் கபடி, சிலம்பம் நிரந்தரமாக இடம் பெற வேண்டும்.
காரணம் இந்திய பாரம்பரிய போட்டியாக கபடி, சிலம்பம் விளங்கினாலும் அது இன்று ஒரு அனைத்துலக போட்டியாகவே உருவாகியுள்ளது.
குறிப்பாக அனைத்துலக ரீதியில் இந்த போட்டிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஆகவே வருங்காலங்களில் சுக்மாவில் இவ்விரு போட்டிகளும் இடம் பெற வேண்டும் என யாரிடமும் கையேந்த கூடாது.
அப் போட்டிகள் நிரந்தரமாகவே சுக்மாவில் இடம் பெற வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கமும் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சும் எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 17, 2026, 5:09 pm
மலேசியாவில் நடைபெறும் சீ விளையாட்டுப் போட்டியில் கபடி இடம் பெறுகிறது: அருள் பிரகாஷ்
August 17, 2026, 9:21 am
செராஸில் ஹரிமாவ் மலாயா அணி வீழ்ந்தது
August 17, 2026, 9:17 am
எப்ஏ கம்யூனிட்டி ஷீல்ட் கிண்ணம்: அர்செனல் சாம்பியன்
August 16, 2026, 12:23 pm
Asia Figure Skating போட்டியில் சரண்யா டத்தோ கிஷோர்குமார் தங்கம் வென்று சாதனை
August 16, 2026, 11:08 am
மென்செஸ்டர் யுனைடெட்டின் செயல்பாடு போதுமானதாக இல்லை: மைக்கல் கேரிக் ஒப்புக்கொண்டார்
August 16, 2026, 11:06 am
சிலாங்கூர் சுக்மா, பாரா சுக்மா போட்டிகளை சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தொடக்கி வைத்தார்
August 15, 2026, 10:21 am
36 வயதில் இமொபிலே ஓய்வை அறிவித்தார்
August 15, 2026, 9:49 am
