செய்திகள் விளையாட்டு
மலேசியாவில் நடைபெறும் சீ விளையாட்டுப் போட்டியில் கபடி இடம் பெறுகிறது: அருள் பிரகாஷ்
செர்டாங்:
மலேசியாவில் அடுத்தாண்டு நடைபெறும் சீ விளையாட்டுப் போட்டியில் கபடி இடம் பெறுகிறது.
மலேசிய கபடிச் சங்கத்தின் பொதுச் செயலாளர் அருள் பிரகாஷ் இதனை கூறினார்.
சிலாங்கூர் மாநில சுக்மா விளையாட்டுப் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் கபடி போட்டியும் இடம் பெற்றுள்ளது. மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக இந்தியர்களை தவிர்த்து பல்லின விளையாட்டாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளது பெருமை அளிக்கிறது.
மேலும் கபடி ஆசியான் விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற்றுள்ளது. ஆனால் சுக்மாவில் கபடி இடம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
இந்நிலை மாற வேண்டும். அடுத்த சும்மா முதல் கபடி ஒரு பதக்க போட்டியாகவே நிரந்தரமாக இடம் பெற வேண்டும்.
இதற்கான முயற்சிகளை மலேசிய கபடி சங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும்.
மேலும் சீ விளையாட்டு போட்டியில் மலேசிய கபடி அணியால் பதக்கம் வெல்ல முடியாது என்ற நிலை இருந்தது.
ஆனால் கடந்த போட்டியில் மலேசிய அணி தங்கப் பதக்கம் வென்றது.
அவ்வகையில் அடுத்த ஆண்டு மலேசியாவில் நடைபெறும் சீ விளையாட்டு போட்டியில் ஆரம்பத்தில் கபடி இடம் பெறவில்லை.
மலேசியா கபடி சங்கம் இவ்வகாரத்தை சாதாரணமாக விடவில்லை.
பல கட்ட முயற்சிகளுக்குப் பின் மலேசியாவில் நடைபெறும் சீ போட்டியில் கபடி இடம் பெறுகிறது.
இதற்கான உத்தரவாதமும் கடந்த வாரம் எங்களுக்கு வழங்கப்பட்டது. ஆக சுக்மா, சீ போட்டி, ஆசியான் போட்டி என அனைத்திலும் கபடி இடம்பெற வேண்டும்.
இதன் மூலம் நமது போட்டியாளர்களின் ஆற்றல் அனைத்து உலக ரீதிக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களின் இலக்கு என்று அருள் பிரகாஷ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 17, 2026, 9:21 am
செராஸில் ஹரிமாவ் மலாயா அணி வீழ்ந்தது
August 17, 2026, 9:17 am
எப்ஏ கம்யூனிட்டி ஷீல்ட் கிண்ணம்: அர்செனல் சாம்பியன்
August 16, 2026, 12:23 pm
Asia Figure Skating போட்டியில் சரண்யா டத்தோ கிஷோர்குமார் தங்கம் வென்று சாதனை
August 16, 2026, 11:08 am
மென்செஸ்டர் யுனைடெட்டின் செயல்பாடு போதுமானதாக இல்லை: மைக்கல் கேரிக் ஒப்புக்கொண்டார்
August 16, 2026, 11:06 am
சிலாங்கூர் சுக்மா, பாரா சுக்மா போட்டிகளை சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தொடக்கி வைத்தார்
August 15, 2026, 10:21 am
36 வயதில் இமொபிலே ஓய்வை அறிவித்தார்
August 15, 2026, 9:49 am
