செய்திகள் கலைகள்
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் முதல் சிங்கிள்: ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகிறது
சென்னை:
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த 'ஜெயிலர்' படத்தின் தொடர்ச்சியாக இந்தப் இரண்டாம் பாகம் உருவாகிறது.
'டைகர்' முத்துவேல் பாண்டியனாக மீண்டும் ரஜினிகாந்த் மாஸ் லுக் உடன் களமிறங்குவதால், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
முதல் பாகத்தில் இடம்பெற்ற 'காவாலா' மற்றும் 'ஹுக்கும்' ஆகிய பாடல்கள் உலகளவில் சென்சேஷனல் ஹிட் அடித்த நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தின் முதல் பாடலும் இணையத்தில் புதிய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாடல் அறிவிப்புடன் சேர்த்து ரஜினிகாந்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் விழா பின்னணியில் கம்பீரமான தோற்றத்தில் ரஜினி காட்சியளிப்பது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
இந்த பாடல் ரஜினியின் மாஸ் அறிமுகப் பாடலாக அல்லது கொண்டாட்டப் பாடலாக இருக்கும் என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நெல்சன்-அனிருத்-ரஜினி கூட்டணியின் காம்போ மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான ஆவலை இரட்டிப்பாக்கியுள்ளது
ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
