நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிவப்பு சமிஞ்சை விளக்கை மீறிச் சென்ற குடிநுழைவு துறை லோரியால் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்

கோலாலம்பூர்:

சிவப்பு சமிஞ்சை விளக்கை மீறிச் சென்ற குடிநுழைவு துறை லோரியால் நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணமடைந்தனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் நிகழ்ந்தது.

குடிநுழைவுத் துறை லோரி ஒன்று சிவப்பு சமிஞ்சை விளக்கை மீறிச் சென்றதுடன் ஒரு கார், பாதசாரி மீது மோதியது.

இதில் 12 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மரணமடைந்தனர்.

மஜு சந்திப்பில் அதிகாலை சுமார் 1 மணியளவில் நடந்த இந்த விபத்தில் பலியானவர்களில் 53 வயது தந்தை அவரது 25, 12 வயதுடைய இரண்டு மகள்கள் ஆவர்.

அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பாதிக்கப்பட்டவரின் 55 வயதான மனைவி தலை, வலது கை, இரு கால்களிலும் காயமடைந்தார்.

பாதிக்கப்பட்டவர் பின்னர் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனையின் சிவப்பு மண்டலத்திற்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார்.

கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறையின் தலைவரும், உதவி ஆணையருமான முகமது சம்சுரி முகமது ஈசா,

இந்த விபத்தில் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச குடிநுழைவுத் துறைக்குச் சொந்தமான ஒரு லோரி, ஒரு புரோட்டான் சாகா, ஒரு இனோகோம் மேட்ரிக்ஸ், நான்கு பாதசாரிகள் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset