செய்திகள் மலேசியா
முன்னாள் அமைச்சர் சேவியர் ஜெயக்குமாருக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணை நிறைவு பெற்றது: எம்.ஏ.சி.சி தகவல்
கோலாலம்பூர்:
முன்னாள் நீர், நில மற்றும் இயற்கைவள அமைச்சர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மீதான ஊழல் வழக்கு விசாரணை நிறைவடைந்துவிட்டதாகவும் அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படவில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி இரு விசாரணை அறிக்கைகளைத் திறந்து முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சேவியருக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லாததால், 2024-இல் இந்த வழக்கை முடித்து வைக்க துணை அரசு வழக்கறிஞர் தீர்மானித்தார்.
ஒரு விசாரணையின் கால அளவு வழக்கின் சிக்கலான தன்மையையும் சான்றுகளைச் சரிபார்க்கும் தேவையையும் பொறுத்தே அமையும் என்றும், அனைத்து விசாரணைகளும் எவ்வித தலையீடும் இன்றி தொழில்முறை நேர்த்தியுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்பட்டதாக SPRM சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விசாரணை முடிவடைந்துவிட்டதால், பொதுமக்களும் பிற தரப்பினரும் இது குறித்து எவ்வித தேவையற்ற தகவல்களையோ அல்லது ஊகங்களையோ பரப்ப வேண்டாம் என்றும் ஊழல் தடுப்பு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக, முன்னாள் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் குவா கியா சூங், சேவியர் மீதான ஊழல் விசாரணை என்னவானது என்றும், அதன் தற்போதைய நிலை குறித்து விளக்கம் அளிக்கப்படாதது பொறுப்புக்கூறல் இடைவெளியை உருவாக்குகிறது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 19, 2026, 5:52 pm
மாலை 6 மணி வரை ஏழு மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை - மெட் மலேசியா தகவல்
August 19, 2026, 12:48 pm
பாகிஸ்தானில் போலி அழைப்பு மையத்தின் மீது நடத்தப்பட்ட சோதனை: மலேசியர் கைது
August 19, 2026, 12:38 pm
SAMBUTAN KEMERDEKAAN EP 2: நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தேசிய கீதம் நெகாராக்கூ வரலாறு
August 19, 2026, 12:04 pm
