நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் பக்தர்கள் தங்கம் வைக்கும் வைபவம் விமரிசையாக தொடங்கியது: டான்ஸ்ரீ நடராஜா

கோலாலம்பூர்:

கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் பக்தர்கள்  தங்கம் வைக்கும் வைபவம் இன்று விமரிசையாக தொடங்கியது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர்  டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.

நாட்டில் பிரசித்திப் பெற்ற ஆலயமாக கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயம் விளங்குகிறது.

இவ்வாலயத்தின் திருப்பணிகள் அனைக்கும் பூர்த்தியாகி வரும் நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.

மிகவும் பிரமாண்டமான முறையில் இந்த கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஆலய தெய்வ விக்ரகங்களுக்கு பக்தர்கள் தங்கம் வைக்கும் வைபவம் இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

இந்த வைபவம் இன்று தொடங்கி நாளை வரை நீடிக்கும். ஆகவே பக்தர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொள்ளலாம்.

அதே வேளையில் இன்று மாலை முதல் கால யாக பூஜையும் தொடங்கவுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 21, 22ஆம் தேதிகளில் பக்தர்கள் எண்ணெய் சாத்துதல் வைபவமும் நடைபெறவுள்ளது.

உச்சக்கட்டமாக ஆகஸ்ட் 23ஆம் தேதி கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா நடைபெறும்.

அன்றைய தினம் இரவு தங்க இரத ஊர்வலமும் நடைபெறவுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் சிறப்பான முறையில் செய்து வருகிறது.

ஆகவே பக்தர்கள் திரளாக வந்து இந்த வைபவங்களிலும் கும்பாபிஷேக விழாவிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset