செய்திகள் மலேசியா
13 வயது மாணவரைத் தலையில் தாக்கி காயப்படுத்திய சம்பவம்: மூன்று மாணவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
குளுவாங்:
13 வயது மாணவரைத் தலையில் தாக்கி காயப்படுத்தியதாக மூன்று படிவம் ஒன்று படிக்கும் மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இருப்பினும், தங்களுக்கு எதிரான குற்றத்தை இருவர் மட்டுமே ஒப்புக்கொண்டனர்.
கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மாலை 5.25 மணியளவில், ஜாலான் குளவாங்கிலுள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 13 வயது மாணவருக்குக் காயம் ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், இவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 34-உடன் இணைக்கப்பட்டு பிரிவு 323-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வழக்கின் உண்மைகளின்படி, பள்ளி முடிந்து குடும்பத்தினர் கூட்டிக்கொண்டு வீட்டிற்குச் செல்லும்போது, குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தன் தலையில் செருப்பை வீசி அடித்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார்
இந்தச் சம்பவத்தால் தலையில் காயமடைந்த மாணவர், மேல் நடவடிக்கைக்காகக் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கை அரசுத் தரப்பு வழக்கறிஞர் நூர் ஷாஸ்லீன் இப்ராஹிம் நடத்தினார்
குற்றம் சாட்டப்பட்ட இரு மாணவர்களும் ஆறு மாத காலத்திற்குள் 90 மணி நேரம் சமுதாயப் பணியைச் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அவர்களின் பெற்றோர்கள் 1,000 ரிங்கிட் பிணையத்தொகையுடன் மூன்று ஆண்டுகளுக்கு நன்னடத்தை பிணைப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் பணிக்கப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 19, 2026, 5:52 pm
மாலை 6 மணி வரை ஏழு மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை - மெட் மலேசியா தகவல்
August 19, 2026, 12:48 pm
பாகிஸ்தானில் போலி அழைப்பு மையத்தின் மீது நடத்தப்பட்ட சோதனை: மலேசியர் கைது
August 19, 2026, 12:38 pm
SAMBUTAN KEMERDEKAAN EP 2: நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தேசிய கீதம் நெகாராக்கூ வரலாறு
August 19, 2026, 12:04 pm
