செய்திகள் மலேசியா
SAMBUTAN KEMERDEKAAN EP 1: மலாயாவின் சுதந்திர வரலாறு மெர்டேக்கா முழக்கத்துடன் ஆகஸ்ட் 31ஆம் தேதி சுதந்திரம் பெற்றோம்
கோலாலம்பூர்:
மலாயாவின் சுதந்திர வரலாறு என்பது அந்நாட்டு மக்களின் நீண்டகால போராட்டத்தையும் ஒப்பற்ற தியாகத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு வீர வரலாறாகும்.
19-ஆம் நூற்றாண்டில் வர்த்தகம் மற்றும் அரசியல் ஆதிக்கத்திற்காக நுழைந்த ஆங்கிலேயர்கள், மலாயாவின் பாரம்பரிய ஆட்சி முறையை மாற்றி சுல்தான்களின் அதிகாரத்தைக் குறைத்தனர்.
பின்னர் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்களின் கொடூர ஆட்சியைச் சந்தித்த மக்கள், அவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர்.
1946-இல் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்த முயன்ற 'மலாயன் யூனியன்' திட்டத்தை மலாய் தலைவர்களும் மக்களும் ஒன்றுதிரண்டு கடுமையாக எதிர்த்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டு, 1948-இல் மலாயா கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இதே காலகட்டத்தில் அம்னோ, ம.இ.கா, மற்றும் ம.சீ.கா போன்ற அரசியல் கட்சிகள் உருவெடுத்தன.
கம்யூனிஸ்டுகளின் அச்சுறுத்தலால் 1948-இல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும், மலாயா தலைவர்கள் அமைதியை நிலைநாட்ட ஆங்கிலேய அரசுடன் இணைந்து செயல்பட்டனர்.
துங்கு அப்துல் ரஹ்மான் தலைமையில் இந்த மூன்று முக்கிய கட்சிகளும் இணைந்து 'கூட்டணி'அமைத்து, 1955 பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றன.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, துங்கு அப்துல் ரஹ்மான் தலைமையிலான குழுவினர் லண்டன் சென்று நடத்திய சுதந்திரப் பேச்சுவார்த்தையின் முடிவில், மலாயாவிற்குச் சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு சம்மதித்தது.
இதன் பயனாக, 1957-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி கோலாலம்பூர் மெர்டேகா மைதானத்தில் 'மெர்டேகா' என்ற முழக்கத்துடன் மலாயாவின் சுதந்திரம் அதிகாரப்பூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த சுதந்திரம் என்பது பல்வேறு இன மக்கள் காட்டிய ஒற்றுமைக்குச் சான்றாகவும், இன்றைய மலேசியாவின் அமைதிக்கும் செழிப்பிற்கும் அடித்தளமாகவும் விளங்குகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 19, 2026, 5:52 pm
மாலை 6 மணி வரை ஏழு மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை - மெட் மலேசியா தகவல்
August 19, 2026, 12:48 pm
பாகிஸ்தானில் போலி அழைப்பு மையத்தின் மீது நடத்தப்பட்ட சோதனை: மலேசியர் கைது
August 19, 2026, 12:38 pm
SAMBUTAN KEMERDEKAAN EP 2: நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தேசிய கீதம் நெகாராக்கூ வரலாறு
August 19, 2026, 12:04 pm
