நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் 1ஆவது முனையத்தில் இடையூறு செய்த பெண்

சிப்பாங்: 

மலேசியாவின் KLIA Terminal 1 விமான நிலையத்தில் நேற்று கூச்சலிட்டு இடையூறு விளைவித்த சீன பெண் சுற்றுலாப் பயணி, சிகிச்சைக்காக காஜாங் மருத்துவமனையின் மனநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

27 வயதான அப்பெண் நேற்று மதியம் 1:19 மணிக்கு சர்வதேச புறப்பாடு பகுதியில் மாண்டரின் மொழியில் கத்தி, ஓடி, பாடி மற்றும் நடனமாடி சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக KLIA காவல்துறைத் தலைவர் ரவி முனுசாமி தெரிவித்துள்ளார்.

அங்கு வந்த பாதுகாப்புப் பணியாளர்கள் அப்பெண்ணை அமைதிப்படுத்தி, மேல் நடவடிக்கைகளுக்காக Terminal 1 காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கடந்த ஆகஸ்ட் 6 அன்று தன் நண்பருடன் மலேசியா வந்த அப்பெண், ஆகஸ்ட் 18 அன்று மீண்டும் சீனாவுக்குத் திரும்ப திட்டமிட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சீனத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்பெண் மேல் சிகிச்சைக்காக காஜாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தற்போது சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அப்பெண் மனநலப் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படும் வேளையில், அவர் போதைப்பொருளைப் பயன்படுத்தவில்லை என நம்பப்படுகிறது.

KLIA பகுதிகளில் பொதுமக்கள் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடக்க வேண்டாம் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset