செய்திகள் மலேசியா
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த குடிநுழைவுத் துறை லோரி விபத்து: உடனடியாக விசாரிக்க பிரதமர் உத்தரவு
புத்ராஜெயா:
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த குடிவரவுத் துறை லாரி விபத்து குறித்து உடனடியாக விசாரிக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உத்தரவிட்டுள்ளார்.
இன்று அதிகாலை தலைநகரில் நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து, உடனடியாகவும் முழுமையாகவும் குடிநுழைவுத் துறை விசாரணைகளை நடத்த வேண்டும்.
விசாரணையில் அலட்சியம் அல்லது சட்ட மீறல்கள் கண்டறியப்பட்டால், சமரசமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
உடனடியாகவும் முழுமையாகவும் விசாரணை நடத்துமாறு குடிநுழைவுத் துறைக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.
அலட்சியமோ அல்லது சட்ட மீறலோ இருந்தால், எந்தவித சமரசமுமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் இன்று முகநூல் பதிவில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 19, 2026, 5:52 pm
மாலை 6 மணி வரை ஏழு மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை - மெட் மலேசியா தகவல்
August 19, 2026, 12:48 pm
பாகிஸ்தானில் போலி அழைப்பு மையத்தின் மீது நடத்தப்பட்ட சோதனை: மலேசியர் கைது
August 19, 2026, 12:38 pm
SAMBUTAN KEMERDEKAAN EP 2: நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தேசிய கீதம் நெகாராக்கூ வரலாறு
August 19, 2026, 12:04 pm
