செய்திகள் மலேசியா
பாகிஸ்தானில் போலி அழைப்பு மையத்தின் மீது நடத்தப்பட்ட சோதனை: மலேசியர் கைது
கோலாலம்பூர்:
பாகிஸ்தானில் உள்ள ஒரு போலி அழைப்பு மையத்தின் மீது நடத்தப்பட்ட சோதனையில் மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து அரச மலேசிய போலிஸ் படை விசாரணையை தொடங்கியுள்ளது என்று போலிஸ் படை தலைவர் டான்ஶ்ரீ காலித் இஸ்மாயில் கூறினார்.
விசாரணை இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதால், இதில் சம்பந்தப்பட்ட மலேசியர்களின் சரியான எண்ணிக்கையை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆதாரச் சங்கிலியைக் கண்டறிய வெளிநாட்டு அதிகாரிகளின் உதவியுடன் விசாரணைக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதனிடையே, இஸ்லாமாபாத்தின் குல்பர்க் கிரீன் குடியிருப்புப் பகுதியில் இயங்கி வந்த இந்த மோசடி மையத்திலிருந்து 40 சீனப் பிரஜைகள் உட்பட மொத்தம் 258 வெளிநாட்டினரைப் பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட மலேசியர்கள், 170 வியட்நாமியர்கள் மற்றும் பிற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்;
மேலும் தொடர்புடைய தூதரகங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, முறையான குற்றச்சாட்டுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 19, 2026, 5:52 pm
மாலை 6 மணி வரை ஏழு மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை - மெட் மலேசியா தகவல்
August 19, 2026, 12:38 pm
SAMBUTAN KEMERDEKAAN EP 2: நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தேசிய கீதம் நெகாராக்கூ வரலாறு
August 19, 2026, 12:04 pm
