நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாலை 6 மணி வரை ஏழு மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை - மெட் மலேசியா தகவல் 

கோலாலம்பூர்: 

மலலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று மாலை 6 மணி வரை ஏழு மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் இடிமின்னலுடன் கூடிய கனமழையும் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வானிலை எச்சரிக்கை குறித்த தகவலை வானிலை மையம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தின் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளது.

திரங்கானு மாநிலத்தில் கோலா திரங்கானு, மாராங், கோலா நெருஸ் மற்றும் சேத்தியூ ஆகிய மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகாங் மாநிலத்தில் பெக்கான், பெரா, மாரான், தெமர்லோ, லிப்பிஸ், ரவுப், கேமரன் ஹைலேண்ட்ஸ், பெந்தோங் மற்றும் குவாந்தான் ஆகிய பகுதிகள் இதில் அடங்கும்.

சிலாங்கூரில் கொம்பாக், உலு லங்காட் மற்றும் பெட்டாலிங் ஆகிய இடங்களும், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஜெலபு பகுதியும் எச்சரிக்கை பட்டியலில் உள்ளன.

ஜொகூரில் குலாய், பொந்தியான், ஜொகூர் பாரு, கோத்தா திங்கி ஆகிய இடங்களும், சரவாக்கில் முக்கா, தலாத், செலாங்காவ் மற்றும் தத்தாவ் ஆகிய பகுதிகளும் பாதிக்கப்படலாம்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset