செய்திகள் மலேசியா
கெப்போங்கில் வயதான பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்; சந்தேக நபர் கைது: போலிஸ்
செந்தூல்:
கெப்போங்கில் வயதான பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் 9 அன்று கெப்போங் சென்ட்ரல் பார்க்கில் உள்ள நான்கு இலக்கு எண்கள் விற்கும் இடத்தில், ஒரு வயதான பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் இன்று போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
செந்தூல் மாவட்ட தற்காலிக போலிஸ் தலைவர் ஜஸ்னி ஜோல்பா இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.
ஆம், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.
ஆகஸ்ட் 9 அன்று, ஒரு வளாகத்தில் பெட்ரோல் என நம்பப்படும் திரவத்தை ஊற்றி தீ வைக்கப்பட்டதில், ஒரு மூதாட்டியின் உடலில் சுமார் 50 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டன.
காலை சுமார் 8 மணியளவில், அந்த வளாகத்தில் கவுண்டர் காவலராகப் பணிபுரிந்த 62 வயதான பாதிக்கப்பட்ட பெண், அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டதாக போலிஸ்க்கு புகார் கிடைத்ததாக ஜஸ்னி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 19, 2026, 5:52 pm
மாலை 6 மணி வரை ஏழு மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை - மெட் மலேசியா தகவல்
August 19, 2026, 12:48 pm
பாகிஸ்தானில் போலி அழைப்பு மையத்தின் மீது நடத்தப்பட்ட சோதனை: மலேசியர் கைது
August 19, 2026, 12:38 pm
SAMBUTAN KEMERDEKAAN EP 2: நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தேசிய கீதம் நெகாராக்கூ வரலாறு
August 19, 2026, 12:04 pm
