செய்திகள் மலேசியா
சைட் சாடிக், பெல்லா அஸ்டில்லா திருமணம் அக்டோபர் 10இல் மே பேங்க் மெர்டேகா டவரில் நடைபெறவுள்ளது
கோலாலம்பூர்:
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சையத் அப்துல் ரஹ்மான் பெல்லா அஸ்தில்லா ஆகியோர், வரும் அக்டோபர் 10 ஆம் தேதி இங்குள்ள மே பேங்க் மெர்டேகா டவரின் 118ஆவது மாடியில் தங்களுக்குத் திருமணம் நடைபெறவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
மார்ச் 28 அன்று நிச்சயதார்த்தம் செய்துகொண்ட 34 வயதான சைட் சாடிக், 32 வயதான பெல்லா, தங்களது குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க, அரபு அல்லது இஸ்லாமியக் கூறுகள் பொறிக்கப்பட்ட முற்றிலும் வெள்ளை நிறக் கருப்பொருளைக் கொண்டு தங்களது மகிழ்ச்சியான நாள் அமையவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
நேற்று இரவு மெலேடாப் பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பில் இந்த நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டதோடு, சைட் சாடிக், பெல்லா இருவரும் முழு வெள்ளை நிற பாரம்பரிய உடையில் தோன்றிய ஒரு சிறப்பு வீடியோ காட்சியும் ஒளிபரப்பப்பட்டது.
தங்கள் நிச்சயதார்த்தத்தை அறிவித்ததிலிருந்து பொதுமக்களிடமிருந்து கிடைத்த பிரார்த்தனைகள், ஆலோசனைகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, பல்வேறு ஏற்பாடுகளையும் கருத்தில் கொண்ட பின்னரே அக்டோபர் 10 ஆம் தேதியைத் தேர்வுசெய்யும் முடிவு எடுக்கப்பட்டதாக சைட் சாடிக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 19, 2026, 5:52 pm
மாலை 6 மணி வரை ஏழு மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை - மெட் மலேசியா தகவல்
August 19, 2026, 12:48 pm
பாகிஸ்தானில் போலி அழைப்பு மையத்தின் மீது நடத்தப்பட்ட சோதனை: மலேசியர் கைது
August 19, 2026, 12:38 pm
SAMBUTAN KEMERDEKAAN EP 2: நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தேசிய கீதம் நெகாராக்கூ வரலாறு
August 19, 2026, 12:04 pm
