செய்திகள் மலேசியா
துன் டாக்டர் மகாதீர், டாக்டர் சித்தி ஹஸ்மா மூன்று வரலாற்று சாதனைகளை படைத்துள்ளனர்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரும் அவரின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மாவும் மூன்று வரலாற்று சாதனைகளை படைத்துள்ளனர்.
இத்தம்பதியரின் நீண்ட ஆயுள் முன்னோடியில்லாத சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் மூன்று அதிகாரப்பூர்வ சாதனைகளைப் பெற்று வரலாறு படைத்துள்ளனர்.
101 வயதான டாக்டர் மகாதீர், ஆசியான் சாதனைகள் அமைப்பால் 'வாழும் மிக வயதான முன்னாள் பிரதமர்' என அங்கீகரிக்கப்பட்டார்.
அதே சமயம், 100 வயதான டாக்டர் சித்தி ஹஸ்மா, 'வாழும் மிக வயதான முன்னாள் பிரதமரின் துணைவியார்' என்ற பட்டத்தைப் பெற்றார்.
இந்தத் தம்பதியினர், 'நூற்றாண்டைக் கடந்து இன்றும் வாழும் முதல் முன்னாள் அரசாங்கத் தலைவர், தம்பதியினர்' என ஆசியா ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தால் கூட்டாக அங்கீகரிக்கப்பட்டனர்.
இந்த விருது, அண்மையில் இங்குள்ள பெர்டானா லீடர்ஷிப் ஃபவுண்டேஷனில் நடைபெற்ற ஒரு விழாவில், ஆலோசனைக் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டேனி ஓய் அவர்களால், நடுவர் குழுவின் தலைவர்களான கிலியன் ஓய், எல்ட்ரிக் கோ ஆகியோருடன் இணைந்து வழங்கப்பட்டது.
இந்தத் தம்பதியினருக்கு மிகவும் அர்த்தமுள்ள ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
டாக்டர் மகாதீர் ஜூலை 10 அன்று தனது 101வது பிறந்தநாளையும், அதைத் தொடர்ந்து ஜூலை 12 அன்று டாக்டர் சித்தி ஹஸ்மாவின் 100ஆவது பிறந்தநாளையும் கொண்டாடினார்.
மேலும், இந்தத் தம்பதியினர் சமீபத்தில் ஆகஸ்ட் 5 அன்று தங்களது 70ஆவது திருமண ஆண்டு விழாவையும் கொண்டாடினர்.
ஆசியான் வட்டாரத்தில் முக்கிய ஆசிய நாடுகளிலும் இதுபோன்ற சாதனை எதுவும் பகிரங்கமாகப் பதிவு செய்யப்படவில்லை என்று ஆய்வின் முடிவுகள் கண்டறிந்துள்ளதாக நடுவர்கள் குழு அறிவித்தது.
இந்த மூன்று அங்கீகாரங்களும், முன்னாள் தேசியத் தலைவராக டாக்டர் மகாதீரின் நீண்ட ஆயுளையும், அவரது மனைவியாக நூறு வயதை எட்டிய டாக்டர் சித்தி ஹஸ்மாவின் வரலாற்றுச் சாதனையையும் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், முன்னாள் அரசாங்கத் தலைவர்களாகவும், இருவரும் 100 வயது வரை வாழ்ந்த தம்பதியராகவும் அவர்களின் தனித்துவத்தையும் அங்கீகரிக்கின்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 19, 2026, 5:52 pm
மாலை 6 மணி வரை ஏழு மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை - மெட் மலேசியா தகவல்
August 19, 2026, 12:48 pm
பாகிஸ்தானில் போலி அழைப்பு மையத்தின் மீது நடத்தப்பட்ட சோதனை: மலேசியர் கைது
August 19, 2026, 12:38 pm
SAMBUTAN KEMERDEKAAN EP 2: நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தேசிய கீதம் நெகாராக்கூ வரலாறு
August 19, 2026, 12:04 pm
