நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சுக்மா கபடி, சிலம்பப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றால்  பேரா அணிக்கு கூடுதல் வெகுமதி: டத்தோ சிவநேசன் அறிவிப்பு

செர்டாங்:

சுக்மா கபடி, சிலம்பப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றால் பேரா அணிக்கு கூடுதல் வெகுமதி வழங்கப்படும்.

பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் இதனை அறிவித்தார்.

சிலாங்கூர் சுக்மா விளையாட்டுப் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் 35 தங்கப்பதக்கம் என்ற இலக்குடன் களமிறங்கி பேரா அணி போராடி வருகிறது.

குறிப்பாக பேரா மாநில கபடி, சிலம்ப அணிக்கு ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முறையில் நான் தலைமையேற்றுள்ளேன்.

கடந்த சுக்மா போட்டியில் பேரா அணி அதிகமாக பதக்கங்களை வெல்ல இவ்விரு போட்டிகளும் முக்கிய பங்கை வகித்தன.

அவ்வகையில் இவ்வாண்டு போட்டியிலும் பேரா அணியினர் அதிகமான பதக்கங்களை வென்று சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

சுக்மாவில் தங்கம் உட்பட இதர பதக்கங்களை வெல்லும் போட்டியாளர்களுக்கு சிறப்பு வெகுமதி வழங்கும் என பேரா மாநில மந்திரி புசார் அறிவித்திருந்தார்.

அதே வேளையில் சிலம்பம், கபடிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றால் பேரா அணிக்கு என்னுடைய சார்பில் கூடுதல் வெகுமதி வழங்கப்படும். இது அந்த போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அமையும்.

செர்டாங்கில் நடைபெற்ற சுக்மா கபடி போட்டியை நேரடியாக கண்டு களித்த பின் டத்தோ சிவநேசன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset