நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கம்யூனிட்டி ஷீல்ட் கிண்ணம்: அர்செனல் சாம்பியன்

லண்டன்:

எப்ஏ கம்யூனிட்டி ஷீல்ட் கிண்ண கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

கம்யூனிட்டி ஷீல்ட் கிண்ணம் என்பது இங்கிலாந்தில் நடக்கும் ஒரு கால்பந்து போட்டி ஆகும்.

முந்தைய ஆண்டின் பிரிமியர் லீக் வெற்றியாளரும், எப்ஏ கிண்ண வெற்றியாளரும் இதில் மோதுவர்.

இது புதிய கால்பந்து பருவத்தின் தொடக்க ஆட்டமாகக் கருதப்படுகிறது.

அவ்வகையில் இவ்வாண்டுக்கான போட்டியில் அர்செனல் அணியினர் மென்செஸ்டர் சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணியின் வெற்றி கோல்களை ரிக்கார்டோ கலாஃபியோரி, காய் ஹாவர்ட்ஸ், மார்ட்டின் ஓடேகார்ட் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் அணியினர் எப்ஏ கம்யூனிட்டி ஷீல்ட் கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.

அதே வேளையில் இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset