நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

செராஸில் ஹரிமாவ் மலாயா அணி வீழ்ந்தது

கோலாலம்பூர்:

2026 ஆசியான் கிண்ண கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், மலேசியா நடப்பு சாம்பியனான வியட்நாமிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இந்த ஆட்டம் செராஸ் கோலாலம்பூர் கால்பந்து அரங்கில் நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இதில் 45ஆவது நிமிடத்தில் வியட்நாம் அணி ஆட்டக்காரர் ரஃபேல்சன் தமது அணியின் முதல் கோலை அடித்தார்.

இரண்டாவது பாதியின் 86ஆவது நிமிடத்தில் தேசிய ஆட்டக்காரர்  டேனிஷ் சொந்த கோல் அடித்ததால் வியட்நாம் அணியின் வெற்றி உறுதியானது.

தான் செங் ஹோ பயிற்சியளிக்கும் அணி, எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் நோக்கில், வரும் புதன்கிழமை ஹனோயில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தேசிய அணி கடைசியாக ஆசியான் போட்டியின் இறுதிப் போட்டிக்கு கடந்த 2018இல் தகுதி பெற்றது.

அப்போதும் அந்த அணிக்கு செங் ஹோவே பயிற்சியாளராக இருந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset