நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் பொது இடங்களில் மின்னிலக்க நாணயச் சேவைகளின் விளம்பரங்களுக்குத் தடை

சிங்கப்பூர்: 

மின்னிலக்க நாணயச் சேவை நிறுவனங்கள், தங்களது சேவைகள் குறித்துப் பொது இடங்களிலும் சமூக ஊடகங்களிலும் விளரம்பரம் செய்ய சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாணய வாரியம் அறிவித்துள்ள புதிய வழிகாட்டி விதிமுறைகளின்படி இந்தத் தடை விதிக்கப்படுகிறது.

Bitcoin, Ethereum போன்ற மின்னிலக்க நாணயங்களின் மிகவும் ஆபத்தான பரிவர்த்தனைகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க சிங்கப்பூர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அதுவும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Singapore tells cryptocurrency exchange Binance to stop payment services  over possible law breach | South China Morning Post

பல மின்னிலக்க நாணயச் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க, பொதுப் போக்குவரத்து நடுவங்கள், வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் போன்றவற்றின் மூலம் தொடர்ந்து விளம்பரம் செய்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாட்டுகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய நிறுவனங்கள் அவற்றின் சொந்த நிறுவன இணையத்தளங்கள், செயலிகள், அல்லது நிறுவனத்தின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட சமூக ஊடகத் தளங்களில் மட்டுமே இனி அத்தகைய விளம்பரங்களை வெளியிட முடியும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

ஆதாரம்: Today

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset