செய்திகள் மலேசியா
இந்திய சமூகம் தொடர்பான விவகாரங்களை டத்தோஸ்ரீ அன்வார் நேரடியாக வழிநடத்த வேண்டும்: 17 கெஅடிலான் தொகுதித் தலைவர்கள் முடிவு
கோலாலம்பூர்:
நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் விவகாரங்களையும் சமூக பொருளாதார வளர்ச்சியையும் நிர்வகிக்கும் அமைப்பை பிரதமரும் கெஅடிலான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாக வழிநடத்த வேண்டும்.
இதை வலியுறுத்தி 24 இந்திய கெஅடிலான் தொகுதித் தலைவர்களில் பதினேழு பேரும் கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் ஒருவரும் பிரதமருக்கு ஒரு அதிகாரப்பூர்வ கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.
மலாக்காவில் நடைபெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டின் போது, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் அந்தக் கடிதத்தை டத்தோஸ்ரீ அன்வாரிடம் வழங்கினார்.
டத்தோஸ்ரீ அன்வாரிடம் இந்த கடிதத்தை நேரடியாக அன்வாரிடம் வழங்கியதை குணராஜ் உறுதிப்படுத்தினார்.
இந்திய சமூகம் எதிர்கொள்ளும் சவால்களையும், நீண்டகாலப் பிரச்சினைகளையும் நாட்டின் உயர்மட்டத் தலைவர்கள் பல்வேறு சமூக-பொருளாதாரத் திட்டங்கள் மூலம் மிகவும் திறம்படக் கையாள்வதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பிரதமர் வெளியிட்ட அறிவிப்புக்கு இணங்க இந்தக் கடிதம் அமைந்துள்ளது.
இது, இந்திய சமூகத்திற்கு உதவுவதற்கான மடானி அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒரு முன்னேற்றப் படியாகும்.
கெஅடிலானில் உள்ள இந்தியத் தலைவர்களாகிய நாம், இந்த முயற்சி சீராக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 19, 2026, 5:52 pm
மாலை 6 மணி வரை ஏழு மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை - மெட் மலேசியா தகவல்
August 19, 2026, 12:48 pm
பாகிஸ்தானில் போலி அழைப்பு மையத்தின் மீது நடத்தப்பட்ட சோதனை: மலேசியர் கைது
August 19, 2026, 12:38 pm
SAMBUTAN KEMERDEKAAN EP 2: நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தேசிய கீதம் நெகாராக்கூ வரலாறு
August 19, 2026, 12:04 pm
