செய்திகள் மலேசியா
MindAppz-இன் மலாய் மொழி பேச்சுப் போட்டி; நாடு முழுவதும் 7,000 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்: தினேஷ்
கோலாலம்பூர்:
MindAppz-இன் மலாய் மொழி பேச்சுப் போட்டியில் நாடு முழுவதும் 7,000 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
MindAppz தலைமை இயக்குநர் தினேஷ் இதனை கூறினார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மலாய் மொழியில் சலைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இப்போட்டி நடைபெற்றது.
நாடு முழுவதிலும் இருந்து கிடத்தட்ட 7,000 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.
இதில் சிறந்து விளங்கிய மாணவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
முதலாம் ஆண்டில் இருந்து மூன்றாம் ஆண்டு வரை ஒரு பிரிவும் நான்காம் ஆண்டில் இருந்து 6ஆம் ஆண்டு வரை ஒரு பிரிவும் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.
இதி முதல் பிரிவில் ஷியாவானி புஷ்பநாதன் முதல் நிலையில் வெற்றி பெற்றார்.
அவருக்கு 2,500 ரிங்கிட்டும் அவர் பயிலும் அலோர் காஜா தமிழ்ப்பள்ளிக்கு 1,000 ரிங்கிட்டும் பரிசாக வழங்கப்பட்டது.
இப்பிரிவில் தர்ஷாந்தினி, ஷமிதா ரோஸ் ஆகிய மாணவர்கள் அடுத்தடுத்த நிலையில் வெற்றி பெற்றனர்.
இரண்டாம் பிரிவில் ஹைசால் அமிரேஸ் முதல் நிலையில் வெற்றி பெற்றார்.
அவருக்கு 5,000 ரிங்கிட்டும் அவர் பயிலும் சுங்கை ரெங்காம் தமிழ்ப்பள்ளிக்கு 1,000 ரிங்கிட்டும் பரிசாக வழங்கப்பட்டது.
இப்பிரிவில் அஸ்விதா, ஓவி சாஸ்தி ஆகியோர் அடுத்தடுத்த நிலையில் வெற்றி பெற்றனர்.
மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இந்த போட்டி தொடர்ச்சியாக நடத்தப்படும் என்று தினேஷ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 19, 2026, 5:52 pm
மாலை 6 மணி வரை ஏழு மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை - மெட் மலேசியா தகவல்
August 19, 2026, 12:48 pm
பாகிஸ்தானில் போலி அழைப்பு மையத்தின் மீது நடத்தப்பட்ட சோதனை: மலேசியர் கைது
August 19, 2026, 12:38 pm
SAMBUTAN KEMERDEKAAN EP 2: நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தேசிய கீதம் நெகாராக்கூ வரலாறு
August 19, 2026, 12:04 pm
