செய்திகள் மலேசியா
நீர்நிலையில் 17 வயது சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயம்
கூச்சிங்:
லவாஸ் பகுதியில் அமைந்துள்ள நீர்நிலையில் 17 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தான்
பாதிக்கப்பட்ட சிறுவனின் இரு கால்களும் காயமடைந்தது. இந்த சம்பவம் லொங் லிடுங் ஜாலான் லாவாஸ் பகுதியில் நிகழ்ந்தது என்று லவாஸ் போலிஸ் தலைவர் லியோங் தின்டான் கூறினார்.
தனது வீட்டில் நீர் விநியோகம் தடைப்பட்டதால், கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த நீர்நிலைப் பகுதிக்கு அச்சிறுவன் சென்றுள்ளான்.
அங்குள்ள புதர்களை வெட்டிச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அச்சிறுவன் திடீரென தனது இரு கால்களிலும் கடுமையான எரிச்சலையும் வலியையும் உணர்ந்துள்ளான்.
பின்னர் பரிசோதித்தபோது, ஷாட்கன் (Shotgun) ரகத் துப்பாக்கியால் சுடப்பட்டதால் ஏற்பட்டதாகக் கருதப்படும் நான்கு காயங்கள் அவனது கால்களில் இருப்பது கண்டறியப்பட்டது.
இரவு 8 மணி ஆகியும் சிறுவன் வீடு திரும்பாததால், அவனது தந்தை காட்டின் அருகில் தேடத் தொடங்கியுள்ளார்.
நீர்நிலைப் பகுதிக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் அச்சிறுவன் பலத்த வலியுடன் தரையில் விழுந்து கிடந்ததை அவனது தந்தை கண்டுபிடித்துள்ளார்.
காயமடைந்த சிறுவன் உடனடியாக சிகிச்சைக்காக லாபுவாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
தற்போது அவனது உடல்நிலை சீராக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் பின்னணியைக் கண்டறியவும், சம்மந்தப்பட்ட நபரைப் பிடிக்கவும் ஆயுதச் சட்டம் 1960 பிரிவு 37 மற்றும் தண்டனைச் சட்டக் கோடு பிரிவு 307 ஆகியவற்றின் கீழ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 19, 2026, 5:52 pm
மாலை 6 மணி வரை ஏழு மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை - மெட் மலேசியா தகவல்
August 19, 2026, 12:48 pm
பாகிஸ்தானில் போலி அழைப்பு மையத்தின் மீது நடத்தப்பட்ட சோதனை: மலேசியர் கைது
August 19, 2026, 12:38 pm
SAMBUTAN KEMERDEKAAN EP 2: நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தேசிய கீதம் நெகாராக்கூ வரலாறு
August 19, 2026, 12:04 pm
