செய்திகள் உலகம்
தென் பிலிப்பைன்ஸில் உள்ள மேல்நிலை பள்ளியில் துப்பாக்கி சூடு: இருவர் பலி
மனிலா:
தெற்கு பிலிப்பைன்ஸின் சாம்போங்கா நகரில் உள்ள அடெனியோ டி சாம்போங்கா உயர்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது.
இத்துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது நிலமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகர மேயர் கைமர் அடான் ஓலாசோ கூறுகையில், உயிரிழந்த இருவருமே மாணவர்கள் என்றும் அதில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திய தாக்குதல்காரர் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்
அத்துடன் தாக்குதல்காரர் துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த கொடூர சம்பவத்தை நடத்தியதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
மேலும் கூடுதல் உயிரிழப்புகளோ அல்லது புதிய காயங்களோ எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
பள்ளி நிர்வாகம் தற்போது பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
பிலிப்பைன்ஸில் கடந்த ஜூன் மாதம் டக்ளோபன் நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இரு மாணவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாயினர்.
அந்த துயரச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்குள் தற்போது இரண்டாவது முறையாக இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
