செய்திகள் உலகம்
Coca Cola உள்ளிட்ட குளிர்பான தயாரிப்புகளை Turkish ஏர்லைன்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது
காசாவில் நிலவும் சூழலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, தனது விமான சேவைகள், ஓய்வறைகளில் (Lounges) வழங்கப்பட்டு வந்த Coca Cola உள்ளிட்ட குளிர்பான தயாரிப்புகளை Turkish ஏர்லைன்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளன.
இந்த முடிவு சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், பெரிய நிறுவனங்களும் வணிக நிறுவனங்களும் தங்களின் வணிக முடிவுகள் மூலமாக சர்வதேச விவகாரங்களில் ஒரு வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
சர்வதேச மோதல்கள் மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்த தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த நுகர்வோர் மத்தியில் 'பொருட்கள் புறக்கணிப்பு' (Boycott) என்பது தற்காலத்தில் சக்திவாய்ந்த ஒரு ஆயுதமாக மாறி வருகிறது.
துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் மற்றும் சில நிறுவனங்கள், காசா விவகாரத்தில் இஸ்லாத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் சில பன்னாட்டு பிராண்டுகளுக்கு எதிராக தொடர்ச்சியான புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
துருக்கி நாடாளுமன்ற வளாகத்திலுள்ள உணவகங்களிலும் சில குறிப்பிட்ட குளிர்பானங்கள், வெளிநாட்டு தயாரிப்புகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் நாட்டின் தேசிய விமான நிறுவனமான Turkish ஏர்லைன்ஸும் இணைந்ததாக வெளிவந்த செய்திகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
கோகோ கோலா என்பது வெறும் குளிர்பானம் மட்டுமல்ல; அது சர்க்கரை, இரசாயன மொருட்கள் நிறைந்த ஒரு Ultra-processed பானமாகும்.
இதில் சேர்க்கப்படும் High Fructose Corn Syrup மற்றும் பல்வேறு ரசாயனங்கள் நமது உடலின் இன்சுலின் சுரப்பியைப் பாதித்து, உடல் பருமன், நீரிழிவு நோய் (Diabetes), மற்றும் கல்லீரல் கோளாறுகள் போன்ற பல ஆபத்தான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றன.
எனவே, உங்கள் உடல்நலத்தின் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள், இன்று முதல் இதுபோன்ற நச்சுத்தன்மை வாய்ந்த பானங்களை முற்றிலும் கைவிடுங்கள்.
உங்கள் உடலுக்காக மட்டுமல்ல, காசாவில் கொல்லப்படும் மக்களுக்கான உங்கள் ஆதரவாக கூட இருக்கும்.
- முகிந்தன் துரைராஜசிங்கம்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
