செய்திகள் உலகம்
ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தை முடக்கம்; காசா அமைதி முயற்சிகள் தீவிரம்
தெஹ்ரான்:
ஈரான்–அமெரிக்கா இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்று காலாவதியாக உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முட்டுக்கட்டையை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிவடைவது மத்திய கிழக்கு நிலவரத்தில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் எவ்வாறு அமையும் என்பது குறித்து சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் குஸ்ரா கிராமத்தில் இஸ்ரேல் கூடுதல் இராணுவ வீரர்களை குவித்துள்ளது.
அப்பகுதியில் இஸ்ரேலிய குடியேறிகள் மூன்று பாலஸ்தீனிய குடும்பங்களின் வீடுகளை முற்றுகையிட்டு இரண்டாவது வாரமாகத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாலஸ்தீனிய தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காசா போர் நிறுத்தம் மற்றும் அமைதித் திட்டத்தை ஏற்க இஸ்ரேலை கட்டாயப்படுத்துமாறு ஹமாஸ் அமைப்பு ‘Board of Peace’ அமைப்பிடம் வலியுறுத்தியுள்ளது.
ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் கலீல் அல்-ஹய்யா தலைமையிலான குழு, அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரை எகிப்தின் அல்-அலமைன் நகரில் சந்தித்து காசா அமைதித் திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
