செய்திகள் உலகம்
பிரேசிலில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி
ரியோ டி ஜெனெய்ரோ:
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகருக்கு வடக்கே உள்ள மலைப்பகுதியான பெட்ரோபோலிஸ் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
பேருந்தில் சிக்கியிருந்த சில பயணிகளை மீட்க, தீயணைப்பு வீரர்கள் தோண்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. விபத்து நடந்த இடத்தில் மொத்தம் 49 பேர் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம், நாட்டின் வடகிழக்கு பகுதியில் நடைபெற்ற மத விழாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர்.
மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பிரேசிலின் பெர்னாம்புகோ மாநிலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர்.
இந்த தொடர் விபத்துகள் பிரேசிலில் சாலைப் பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
