செய்திகள் உலகம்
முனைவர் எச். எம். சலீமின் இரு நூல்களை மூத்த துணை அமைச்சர் முரளிப் பிள்ளை வெளியிட்டார்
சிங்கப்பூர்:
ஜாமியா சிங்கப்பூர் அறநிறுவனம் முனைவர் எச். எம். சலீம் அவர்களின் “பேசாப் பொருள்” நூலையும் Children of Metropolis (பெருநகரத்துச் சிறுவர்கள்) என்ற தலைப்பிலான கவிஞர் இசாக் அவர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் இரண்டு நூல்களை 15 ஆகஸ்ட் அன்று பிற்பகலில் வெளியிட்டது.
ஜாமியா நிறுவன நிகழ்வுகள் எப்போதும் தனக்கென ஒரு உயர் தரத்தோடு நடைபெறும் என்பதற்கொப்ப நேற்றைய நிகழ்ச்சியும் சிறப்பாக இருந்தது.
ஜாமியா சிங்கப்பூர் தலைமையகத்தில் அல் ஃபைசல் அரங்கில் சிறப்பான ஏற்பாடுகளோடு நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கு ஜாமியா சிங்கப்பூர் தலைவர் பேராசிரியர் முனைவர் டத்தோ முஹம்மது ஹஸ்பி அபூபக்கர் தலைமை தாங்க , சட்டம், போக்குவரத்துத் துறைகளுக்கான மூத்த துணை அமைச்சர் முரளிப் பிள்ளை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இரு நூல்களையும் வெளியிட்டு சிறப்பித்தார்.
முனைவர் சலீம் அவர்களைப்பற்றியும் நூலைப்பற்றியும் கல்வியாளர் பொன். சுந்தரராசு, வளர் தமிழ் இயக்கத் தலைவர் ஹாஜி நசீர்கனி, சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் ஹாஜி அ. முஹம்மது பிலால் ஆகியோரின் சிற்றுரைகள் காணொலிகளாக காட்டப்பட்டன.
ஊடகவியலாளர் ஸதக்கத்துல்லாஹ்நூல் அறிமுகவுரை நிகழ்த்தினார்.
- கவிஞர் தெளஃபீக் அஹமது
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
