நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூரின் ஜொஹான் செத்தியாவில் காற்றின் தர குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு 

கிள்ளான்: 

சிலாங்கூரில் உள்ள ஜொஹான் செத்தியாவில் காற்றின் தர குறியீடு 157ஆக பதிவாகியுள்ளது. 

இந்த அளவீடு அப்பகுதியில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இதனிடையே, நாடு தழுவிய அளவில் உள்ள 64 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள் மிதமான அளவீட்டைப் பதிவு செய்துள்ளன

இருப்பினும், கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் காற்றின் தரம் தொடர்ந்து நல்ல நிலையில் நீடிக்கிறது.

இதில் 0 முதல் 50 வரை நல்ல நிலையையும், 51 முதல் 100 வரை மிதமான நிலையையும் குறிக்கின்றன.

மேலும், 101 முதல் 200 வரையிலான அளவீடு ஆரோக்கியமற்ற நிலையையும், 300-க்கும் அதிகமான அளவீடு அபாயகரமான நிலயையும் குறிக்கிறது.

நாடு இன்னும் தென்மேற்கு பருவமழை காலத்தில் இருப்பதால் செப்டம்பர் இறுதி வரை இந்த நிலை தொடரலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset