நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்காவில் 6 இடங்களை குறிவைக்கும் தேசியக் கூட்டணி; வெள்ளை வாக்காளர்கள் உறுதியல்ல: இட்ரிஸ்

கோலாலம்பூர்:

வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணியுடன் கூட்டணி அமைத்து தேசியக் கூட்டணி ஆறு இடங்களில் போட்டியிடக்கூடும்.

இருப்பினும் அதிகாரப்பூர்வ இடப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை என்று தேசியக் கூட்டணி உச்சமன்ற உறுப்பினர் இட்ரிஸ் அஹ்மத் கூறினார்.

தனது பலத்திற்குப் பொருந்தாத இடங்களை பாஸ் கேட்காது. எந்தக் கட்சியும் தங்களிடம் இன்னும் "வெள்ளை" வாக்காளர்கள் இருப்பதாகக் கருதக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

மாநிலத் தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவளித்து, பொதுத் தேர்தலில் மற்றொரு கட்சியைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள் இருப்பதால், மலேசிய அரசியல் இப்போது மேலும் மேலும் நிச்சயமற்றதாகி வருகிறது.

இது பகாங்கிலும் நடந்தது. எங்களில் சிலர் மாநில சட்டமன்றத்தில் வென்றோம். ஆனால் நாடாளுமன்றத்தில் தோற்றோம்.

இன்றைய வாக்காளர்கள் மாறும் தன்மை கொண்டவர்கள். உதாரணமாக, வெள்ளை வாக்கு என்ற சொல் அம்னோவுக்கானது என்று நாம் இனி கருத முடியாது, ஏனெனில் அது உறுதியானது அல்ல. பாஸ் கட்சிக்கும் இதுவே பொருந்தும்.

மேலும், இந்த இளம் வாக்காளர்களின் ஆதரவை நம்மால் கணிக்க முடியாது. அரசியலில் மாற்றத்தைத் தீர்மானிப்பவர்கள் அவர்கள் தான் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset