நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆண்டு இறுதிக்குள் தனி சட்டத்துறை தலைவர், அரசு வழக்கறிஞர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: கோபிந்த் சிங்

புத்ராஜெயா:

கூட்டரசு அரசாங்கத்தில் நீடிப்பதாக ஜசெக முடிவு செய்த ஒரு நாள் கழித்து அதன் தலைவர் கோபிந்த் சிங் முக்கிய நிறுவன சீர்திருத்தங்களை விரைவுபடுத்தி அவற்றை ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றுவதை உறுதி செய்யுமாறு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை வலியுறுத்தினார்.

நேற்றைய சிறப்பு மாநாட்டில் பிரதிநிதிகள் எடுத்த முடிவு, அரசாங்கத்தில் நீடிப்பதற்கான ஆணையைத் தொடர்ந்து, நிறுவன,  பொருளாதார சீர்திருத்தத் திட்டங்களைச் செயல்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது என்று கோபிந்த் கூறினார்.

சட்டத்துறை தலைவர், அரசு வழக்கறிஞர் ஆகியோரின் பொறுப்புகளைப் பிரிப்பதற்கும், பிரதமரின் பதவிக்காலத்தை இரண்டு பதவிக் காலங்களுக்குள் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு மசோதா உட்பட, அரசாங்கம் ஒரு தெளிவான, உறுதியான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

பாதுகாப்புக் குற்றங்கள் சட்டம் (சோஸ்மா),  அமைதியான கூட்டச் சட்டம் 2012 ஆகியவற்றில் நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் திருத்தங்களையும் விரைவுபடுத்த வேண்டியுள்ளது.

சட்டத்துறை தலைவர், அரசு வழக்கறிஞரின் பதவிகளைப் பிரிப்பது மற்றும் பிரதமருக்கு இரண்டு பதவிக் கால வரம்பு ஆகியவை தொடர்பான மசோதாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதால், சீர்திருத்தத்திற்கான அடிப்படை ஏற்கனவே உள்ளது.

சோஸ்மா திருத்தம் குறித்த அமைச்சரவை அறிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அமைதியான கூட்டச் சட்டத் திருத்தம் கடந்த சில மாதங்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இவை அனைத்தும் மேலும் தாமதமின்றி இறுதி செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset