நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாய்க்காரர்களுக்கே போதைப்பொருள் உண்மையான அச்சுறுத்தல்; மற்ற இனங்கள் அல்ல: சைபுடின்

கோலாலம்பூர்:

இந்த நாட்டில் மலேசியர்களின் நிலை, மற்ற இனங்களின் இருப்பால் அச்சுறுத்தப்படவில்லை.

மாறாக, வறுமை, போதைப்பொருள் பழக்கம் போன்ற சமூகப் பிரச்சினைகளாலேயே அதிகம் அச்சுறுத்தப்படுகிறது என்று கெஅடிலான் உதவித் தலைவர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் கூறினார்.

உள்துறை அமைச்சராகவும் இருக்கும் அவர், பெரும்பான்மை இனத்தினர் தொடர்ந்து வறுமையாலும் கடுமையான போதைப்பொருள் பழக்கத்தாலும் பீடிக்கப்படும்போதுதான் அவர்களுக்கு உண்மையான அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

இந்த நாட்டில் மற்ற இனங்களின் இருப்பால் மலாய்க்காரர்களும் முஸ்லிம்களும் அச்சுறுத்தப்படவில்லை.  இந்த நாட்டில் சீனர்கள் இருப்பதால் மலாய்க்காரர்கள் அச்சுறுத்தப்படவில்லை.

இந்த நாட்டில் இந்தியர்கள் இருப்பதால் மலாய்க்காரர்கள் அச்சுறுத்தப்படவில்லை என்பதை நான் கூற விரும்புகிறேன்.

மலேசியர்கள் ஏழைகளாக இருந்தால், அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். போதைப்பொருள் பிரச்சினைகளில் மலாய்க்காரர்களே அதிகம் ஈடுபட்டிருந்தால், அவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார்கள்.

இது மலாய்க்காரர்களுக்கே ஓர் அச்சுறுத்தலாகும் என்று அவர் கூறினார்.

மலாக்கா சர்வதேச வர்த்தக மையத்தில் நடைபெற்ற கெஅடிலான் தேசிய மாநாட்டில், நிறைவுரை ஆற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset