செய்திகள் மலேசியா
மாநாட்டில் குறைந்த பங்கேற்பு என்பது ஜசெகவில் மோசமான விஷயங்கள் நடப்பதற்கான அறிகுறி: ராமசாமி
கோலாலம்பூர்:
ஜசெக ஒற்றுமை அரசில் நீடிக்கும் என்று தீர்மானித்த, கட்சியின் சிறப்பு மாநாட்டில் நேற்று கலந்துகொண்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறித்து முன்னாள் ஜசெக தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் பி. ராமசாமி கேள்வி எழுப்பினார்.
கட்சியின் இந்த முக்கிய முடிவின் மீது வாக்களிக்க நடைபெற்ற சிறப்பு மாநாட்டில், 4,265 பிரதிநிதிகளில் 52% அதாவது 2,223 பேர் மட்டுமே கலந்துகொண்டது மிகக் குறைவு என்று அவர் விவரித்தார்.
தீர்மானத்தில் கலந்துகொண்டு ஆதரவளித்த பிரதிநிதிகளின் எண்ணிக்கையை மட்டும் பார்க்காமல், ஜசெக தனது பிரதிநிதிகளில் கிட்டத்தட்ட 50% பேர் ஏன் சிறப்பு மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
வராத பிரதிநிதிகளில் பெரும்பான்மையானோர் மாநாட்டில் கலந்துகொண்டால், அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஏறக்குறைய 50% பிரதிநிதிகள் வராதது, ஜசெக கட்சிக்குள் நிலைமை முழுமையாகச் சரியாக இல்லை என்பதைக் காட்டுகிறது.
அரசாங்கத்தில் நீடிப்பதற்கான தீர்மானத்தை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறியாகவும் இது இருக்கலாம் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 19, 2026, 5:52 pm
மாலை 6 மணி வரை ஏழு மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை - மெட் மலேசியா தகவல்
August 19, 2026, 12:48 pm
பாகிஸ்தானில் போலி அழைப்பு மையத்தின் மீது நடத்தப்பட்ட சோதனை: மலேசியர் கைது
August 19, 2026, 12:38 pm
SAMBUTAN KEMERDEKAAN EP 2: நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தேசிய கீதம் நெகாராக்கூ வரலாறு
August 19, 2026, 12:04 pm
