நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிந்தா ரோட்டரி கிளப்பின் 48ஆவது தலைவராக தமிழரசன் தேர்வு

ஈப்போ:

கிந்தா ரோட்டரி கிளப் 2026–2027ஆம் ஆண்டுக்கான 48ஆவது தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ரோட்டேரியன் ஆர். தமிழரசன் தேர்வு செய்யபட்டார்.

நீண்டகாலமாக சமூக சேவையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தமிழரசன் சேவையைப் பாராட்டியுள்ள அவர், சமூகத்தின் தேவைகளை உணர்ந்து, கருணை, பணிவு, தன்னலமற்ற சேவை உணர்வுடன் தொடர்ந்து செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது எனக் கௌரவப்படுத்தப்பட்டார்.

பதவி அல்லது அங்கீகாரத்தை எதிர்பாராமல் பிறருக்கு உதவ வேண்டும் என்ற அவரது மனப்பான்மை, ரோட்டரியின் “Service Above Self” என்ற உயரிய கொள்கையை பிரதிபலிப்பதாகவும் கூறப்பட்டது.

மேலும், நேர்மை, நம்பகத்தன்மை, அக்கறை மற்றும் தன்னலமற்ற சேவை ஆகிய பண்புகளை அடிப்படையாகக் கொண்டு தமது சேவை தொடரும் என்று ஈப்போவில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் இவ்வாறு தமிழரசன் உரையாற்றியபோது கூறினார்.

இந்த நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் டாக்டர் எம். ஜெயபாலன்,
தேர்வு செய்யபட்டவர்கள் ழ ஞானம், ஒற்றுமை, வெற்றி மற்றும் மனிதகுலத்திற்குச் சேவை செய்வதற்கான எண்ணற்ற வாய்ப்புகளால் சிறக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

“மனிதகுலத்திற்குச் செய்யும் சேவையே உயர்ந்த வழிபாடு” என்ற கருத்தையும் அவர் குறிப்பிட்டார்

நமிழரன் பல ஆண்டுகள் பல. சமுக இயக்கங்களில் சேவையீற்றிய அனுவம் உள்ளதால் கிந்தா ரோட்டரி கிளப்பின் தலைவராக தேர்வு செய்யபட்டுள்ளது ,அவர் மேலும் சிறந்த சேவையை வழங்குவார் என்று கூறினார்

இந்த நிகழ்வில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset