நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இளைஞர்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்; மூவின இளைஞர்களின் ஒற்றுமை பாராட்டுக்குரியது: டத்தோஸ்ரீ சரவணன்

ஈப்போ:

இளைஞர்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக அமையும்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை தெரிவித்தார்.

மூன்று இனங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து சமூக நலப் பணிகளில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

இத்தகைய ஒற்றுமை நாட்டின் நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும்.

ஈப்போவில் மலேசிய மக்கள் சமாதான இயக்கம், பேரா மாநில கிளையின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்ட அவர் ஆற்றிய உரையில் இவ்வாறு  குறிப்பிட்டார்.

இந்த இயக்கத்தை உருவாக்கி, அதன் வாயிலாக பல்வேறு சமூக நலச் சேவைகளை முன்னெடுத்து வரும் அதன் தலைவர் டாக்டர் ஆர். நவரத்தினம், அதன் நிர்வாக உறுப்பினர்களின் பரந்த சிந்தனையையும் சமூக அக்கறையையும் தாம் பாராட்டுவதாக டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

உதவி தேவைப்படுவோருக்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றும், குறிப்பாக சமூக நலப் பணிகளில் இளைஞர்களின் பங்களிப்பு மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இன்றைய இளைஞர்களே நாளைய நாட்டின் தலைவர்கள். அவர்களுக்கு உரிய கல்வி, வழிகாட்டுதல், திறன் மேம்பாடு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வழங்குவது அனைவரின் கடமையாகும்.

இளைஞர்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். மூன்று இன இளைஞர்கள் ஒற்றுமையுடன் சமூக நலப் பணிகளில் ஈடுபடுவது நமது நாட்டின் நல்லிணக்கத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த ஒற்றுமையும் நல்லிணக்கமும் தொடர்ந்து வலுப்பெற வேண்டும் என்றார்.

இதனிடையே, பி. ஆர் எஸ். எம். இயக்கத் தலைவர் நவரத்தினம் , மக்களுக்கு உதவி செய்வதில் வெறும் வாக்குறுதிகளை வழங்காமல், தங்களால் இயன்ற உதவிகளை நேர்மையாகவும் தொடர்ந்து வழங்குவதே முக்கியம் என வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset