நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூரில் ஜொஹான் செத்தியாவில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு 

கோலாலம்பூர்: 

சிலாங்கூர் மாநிலத்தில் ஜொஹான் செத்தியா எனும் பகுதியில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது. 

அப்பகுதியில் மட்டுமே காற்றின் தர குறியீடு 151ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் துறை தெரிவித்தது. 

அதேவேளையில், நாட்டின் 58 பகுதிகள் மிதமான காற்றுத் தரத்தைப் பதிவு செய்துள்ளதாக APIMS தரவுகள் தெரிவிக்கின்றன.

இதில் சரவாக்கில் உள்ள செரியான் பகுதி 96 என்ற மிக அதிக மிதமான அளவைப் பதிவு செய்துள்ளது.

சரவாக்கின் சமரஹான் (90), கூச்சிங் (86), மற்றும் ஸ்ரீ அமான் (80) ஆகிய பகுதிகள் மிதமான அளவை எட்டியுள்ளன.

மேலும் ஜொகூரின் பெங்கெராங் (87) மற்றும் சிலாங்கூரின் பந்திங் (82), கிள்ளான் (80) ஆகிய இடங்களிலும் காற்றுத் தரம் மிதமாக உள்ளது.

காற்றுத் தூய்மைக்கேடு சுட்டெண் 0 முதல் 50 வரை நல்ல நிலையையும், 51 முதல் 100 வரை மிதமான நிலையையும் குறிக்கிறது.

ஆனால் 101 முதல் 200 வரை சுகாதாரமற்றது எனவும், 201க்கு மேல் சென்றால் மிகவும் அபாயகரமானது எனவும் வகைப்படுத்தப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset