செய்திகள் மலேசியா
கெஅடிலான் மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும்; தகவல் தொடர்பை வலுப்படுத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
மலாக்கா:
கெஅடிலான் மக்களின் குரல்களுக்கும் கவலைகளுக்கும் முன்னுரிமை அளித்து அடிமட்ட அளவில் பணிகளை வலுப்படுத்துவதோடு, தனது குறைகளை ஒப்புக்கொண்டு அவற்றை மேம்படுத்தவும் துணிய வேண்டும்.
ஒவ்வொரு தேர்தல் முடிவையும் மக்களிடமிருந்து வரும் ஒரு செய்தியாகவும், கட்சி தனது அணுகுமுறையை மறுமதிப்பீடு செய்து, அதன் பணிகளைச் சீரமைப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் பார்க்க வேண்டும் என்று அதன் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கூறினார்.
ஆயர் கெரோவில் உள்ள மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற 2026 கெஅடிலான் தேசிய மாநாட்டையொட்டி, தலைவரின் கொள்கை உரை மீதான நிறைவுரையை ஆற்றிய பின்னர் ஊடகங்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
மக்கள் நமக்கு என்ன தெரிவிக்க விரும்புகிறார்கள் என்பதை நாம் செவிமடுக்க வேண்டும்.
குறைகள் இருந்தால், அவற்றை நாம் மேம்படுத்துவோம்.
இன்னும் மக்களைச் சென்றடையாத அல்லது அவர்களால் உண்மையாக உணரப்படாத விஷயங்கள் இருந்தால், நாம் செயல்படும் விதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மக்கள் நம்மைத் தேடி வருவார்கள் என்று காத்திருக்க வேண்டாம்." நாம் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் புகார்களைக் கேட்டு, அன்றாடப் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு, தீர்வுகளைக் கண்டறிய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுவதற்காக, கிளை, வட்டார அளவிலான செயல்பாடுகள் களத்தில் மேலும் தீவிரமாகச் செயல்பட்டு, தற்போதுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று டத்தோஸ்ரீ ரமணன் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 16, 2026, 10:49 pm
நிலைத்தன்மைக்காக அம்னோவுடன் ஒத்துழைக்க வேண்டியதன் யதார்த்தத்தை ஜசெக ஏற்றுக் கொள்கிறது: அந்தோனி லோக்
August 16, 2026, 10:48 pm
மடானி அரசாங்கத்திற்கான ஜசெகவின் ஆதரவு ஒரு வெற்று காசோலை அல்ல: கணபதிராவ்
August 16, 2026, 10:46 pm
