செய்திகள் மலேசியா
ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் நீடிப்பதற்கான தீர்மானத்தை பெரும்பான்மையான ஜசெக பேராளர்கள் ஏற்றுக் கொண்டனர்
புத்ராஜெயா:
கட்சியின் அரசியல் திசை குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போதைய நிர்வாகத்தின் பதவிக்காலம் முடியும் வரை ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் நீடிப்பதற்கான தீர்மானத்தை ஜசெக பேராளர்கள் இன்று நிறைவேற்றினர்.
கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோனி லோக் ஒரு சிறப்புத் தீர்மானத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து,
புத்ராஜயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் வாக்கெடுப்பு மூலம் இந்த முடிவு எட்டப்பட்டது.
ஜசெக அரசாங்கத்தில் நீடிப்பதற்கு ஆதரவாக 1,857 பிரதிநிதிகளும், வெளியேறுவதற்கு எதிராக 242 பிரதிநிதிகளும் வாக்களித்ததாக ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சின் அறிவித்தார்.
1,704 கிளைகளிலிருந்து மொத்தம் 4,264 பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர்.
முன்னதாக, விவாதத்தின் போது, அரசாங்கத்தின் செயல்பாடுகளில் அதிருப்தி இருந்தபோதிலும், பெரும்பாலான பிரதிநிதிகள் கூட்டரசு நிர்வாகத்தில் நீடிக்க வேண்டும் என்ற வலுவான விருப்பத்தை வெளிப்படுத்தினர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது தற்போதைய நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று பேராளர்கள் கருதியதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 16, 2026, 3:48 pm
உண்மை, நீதி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம் தொடர வேண்டும்: அமைச்சர் முஹம்மது சாபு
August 16, 2026, 12:56 pm
முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அஜீஸ் எம்ஏசிசியால் கைது செய்யப்படவில்லை: மகன்
August 16, 2026, 12:55 pm
சமூக நீதி, தேசிய வளர்ச்சிக்கான முதன்மை செயல்திட்டமாக மனநலப் பாதுகாப்பை உருவாக்க வேண்டும்: குணராஜ்
August 16, 2026, 12:22 pm
