நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அக்கு சட்டத்தை ரத்து செய்வது சிறந்த முடிவு; ஆனால் வழிபாட்டுத் தலங்களின் கோரிக்கைகளுக்கும் அரசு செவிசாய்க்க வேண்டும்: மஹிமா

கோலாலம்பூர்:

மாணவர்களுக்கு ஒரு பரந்த ஜனநாயக வெளியை வழங்குவதில், 1971ஆம் ஆண்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டத்தை (அக்கு) ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவு சிறந்த நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

ஆனால் வழிபாட்டுத் தலங்களின் குரல்களுக்கும் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கப்பட வேண்டும்.
மலேசியாவின் இந்து ஆலய, சங்கங்களின் பேரவையின் (மஹிமா) தலைவர் டத்தோ என். சிவக்குமார் இதனை கூறினார்.

இந்த சட்டத்தை  ரத்து செய்தது, அரசாங்கம் மாணவர்களின் குரல்களுக்குச் செவிசாய்க்கவும் அவர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தயாராக உள்ளது என்பதை நிரூபிக்கிறது.

1971 முதல் அக்கு பல்கலைக்கழகத்தின் சட்டக் கட்டமைப்பாக மாறிய பிறகு, இந்த நடவடிக்கை மாணவர்களுக்குத் தங்கள் கருத்துக்களை இன்னும் வெளிப்படையாகவும், தைரியமாகவும், ஒளிவுமறைவின்றியும் வெளிப்படுத்த ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என்று அவர் கூறினார்.

மலேசியாவில் மாணவர்களுக்கு அதிக சுதந்திரத்தையும் ஜனநாயக வெளியையும் வழங்குவதற்காக அக்கு கலைக்கப்படும் என்ற அறிவிப்பை நான் வரவேற்கிறேன்.

மாணவர்களின் குரல்கள் கேட்கப்படுகின்றன. மேலும் அவர்களின் நலனுக்காக உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்தக் கலைப்பு, மாணவர்களின் கைவிலங்குகளை அகற்றி, தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை அவர்களுக்கு அளிப்பதைப் போன்றது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset